கோடிகா

திருக்கோடிகா என்று வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சோலையின் இறுதி அல்லது இறுதியில் உள்ள சோலை என்ற பொருளில் இப்பெயர் அமைந்திருக்கலாம். சம்பந்தரும், திருநாவுக்கரசரும் இங்குள்ளக் கோயில் இறையைப் பரவுகின்றனர். கோடிகாவுடைய கோவே எனத் திருநாவுக்கரசர் பாட (51) கொந்தணிகுளிர் பொழிற் கோடிகா என (235-10) சம்பந்தர் பாடுகின்றார். திருவிடை மருதூருக்கு அப்பால் ஆற்றுக்கு அப்பால் உள்ளது என்ற எண்ணம் தன் செழிப்பையும் சோலையையும் நம் கண்முன் கொணர்கிறது.
பருக்கோடி மூடிப்பலர் அழா முனம்
திருக்கோடிகா அடை நீ சென்று (6)
என்பது ஷேத்திரக் கோவை வெண்பா. கல்வெட்டுகள் கோடிகா என்ற பெயரைக் குறிப்பிடுகின்றன. மேலும் திருக்கோடிகாவாகிய கண்ணமங்கை என்ற குறிப்பு, கண்ணமங்கை என்ற பெயரையும் சுட்டுகிறது. கண்ண கண்ண கிருஷ்ணர் கோயில் கொண்ட எட்டு ஊர்களுள் ஒன்று திருக் கண்ண மங்கை. திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற தலம் இது.
கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கை. (1643)
கருநெல் சூழ் கண்ணமங்கை (1848)
போன்ற பல எண்ணங்கள் மங்கையின் செழிப்பு பற்றி அமைகின்றன. மேலும் மங்கை நகராளன் (2008) கணமங்கை (3775-71) என, பிற, பெயர மைப்புகளும் தெரிய வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் திருவா ரூருக்கு அருகில் இருக்கும் இத்தலம், திருக்கண்ணமங்கை என்று வழங்கப்படுகிறது என்ற எண்ணம் து தொடர்பானது. மங்கலம் என்ற பெயர் விகுதியை, பொதுக் கூற்றினைச் சங்க இலக்கியம் முதற்கொண்டே காண்கின்றோம். மங்கலம் என்ற கூறு, மங்கை என்று மருவி வழங்கும் நிலையை அதி யரைய மங்கலம் அதியரை மங்கை என்றாகிப் பின்னர், அப்பெய ரும் மருவி அதிகை என மருவியதில் கண்டோம். அந்நிலையில் இப்பெயரும் கண்ணமங்கலம் என்றிருந்து பின்னர் கண்ண மங்கை என்று திரிந்திருக்க வாய்ப்பு அமைகிறது. மேலும், மங்கலம் என்று மட்டும் பெயர் வைத்தல் காணப்படவில்லை. எனவே கண்ணன் கோயில் கருதி கண்ணன் மங்கலம் என்று பெயர் சூட்டிய பின்னர். இடைக்காலத்திலேயே கண்ணமங்கை என்று மருவி இருக்கலாம் எனத் தோன்றுகிறது இந்நிலையில் கோடிகா, கண்ணமங்கலம் இரண்டும் ஒரே ஊர்க்குரிய பெயர்களாக அமைகின்எறன.