கோசலம் வட இந்தியாவில் சுமார் கி.மு. 550இல் விளங்கிய ஒரு நாடு. ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்று இது என்றும், இந்நாட்டின் தலைநகரம் அயோத்தியென்றும் நூல்கள் கூறும், இப்போது இப்பகுதி அயோத்தி என வழங்கப் பெறுகிறது. இது புத்தர் காலத்தில் முக்கிய நாடாக இருந்தது. இந்த நாட்டை ஆண்டவர்கள் சூரிய வமிச அரசர்கள். ஓவியத்தொழிலர் உறைந்தநாடு என்று இலக்கியம் கூறுகிறது.
“கோசலத்தி யன்ற வோவியத் தொழிலரும்
வத்தநாட்டு வண்ணக் கம்மரும்
தத்தற்கோண்மேற்றங் கைத்தொழில் தோன்ற” (பெருங். 1:58 43 45)