கோசம்பி வடஇந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அலகபாத் மாவட்டத்தில் யமுனையாற்றங்கரையில் உள்ள ஓர் ஊர். ‘கெளசாம்பி’ என்ற பண்டைப் புகழ்பெற்ற நகரம் இங்கு புதை உண்டு இடைப்பதாகச் சொல்லப்படுகிறது. சிதைந்த பெரிய கோட்டை ஒன்று இங்கு உள்ளது. நான்கு மைல் சுற்றளவு
௨ள்ளது. உயரம் 30 35 அடி. மத்தியில் நவீன ஜைனக் கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகில் 11 ஆம் நூற்றாண்டில் ஜைனச் சிற்பங்கள் பல தோண்டியெடுக்கப்பட்டன. ஒரு பக்கத்தில் சிதைந்த செங்கல் மேடையில் ஒரே கல்லாலான பெரிய உருவம் ஓன்று உள்ளது. அதில் 3 அல்லது 6 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. அருகிலே சுட்டமண் உருவங்களும், சிற்பங்களும், நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நாணயங்களில் கி.மு. இரண்டு அல்லது முதல் நூற்றாண்டில் ஆண்ட அரசர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. கோட்டைக்கு வடமேற்கே மூன்று மைல் தொலைவில் பாபோசா (pabhosa) என்ற குன்று உள்ளது. அதன் மேலுள்ள குகையில் முக்கியமான கல்வெட்டுகள் உள்ளன. கோசம்பி நகரம் ஆதியில் குசாம்பன் என்னும் அரசனால் உண்டாக்கப்பட்டதென்பர். உதயணனின் தலைநகர் இங்கே அரசு புரிந்த உதயணன் சிறைப்பட்டு உஞ்சை நகர்க்குச் சென்ற பொழுது பகைவனாகிய பாஞ்சால நாட்டு மன்னனால் இந்நகர் கைக்கொள்ளப்பட்டது. மீண்டும் உதயணனால் கைப்பற்றப் பட்டது.
“கொடிக் கோசம்பிக் கோமகனாகிய
வடித் தோர்த்தானைவத்தவன்”. (மணிமே.151:61 62)
“கோணை நீண்மதிற் கொடிக் கோசம்பி
நகைத்துணை யாய மெதிற்கொள (பெருங். 1:48:69 70)
“குடிகெழு வளமனை குழீஇய செல்வத்துக்
கன்னி நன்மதிற் கடிக்கோசம்பி” (௸,28:149 150)