கோகழி

கோகழி யாண்ட குருமணியைத் தம் திருவாசகத்தில் மிகுதியாகப் போற்றிப் பாடுகின்றார் மாணிக்கவாசகர். கோகழியாண்ட கோவே போற்றி எனப் போற்றித் திரு அகவலில் பாடுகின்றார். (157) கோகழி என்ற ஊர் திருப்பெருந்துறை என்ற பெயரையும் உடையது.
சீரார் பெருந்துறை – திரு.சிவ -15
திருவார் பெருந்துறை — திரு – கீர்த் – 54-55
தென்னன் பெருந்துறை – திரு -திருபொற்-9.2
தன்னன் பெருந்துறை என்ற சொற்றொடர், இது பாண்டி நாட்டைச் சார்ந்தது என்பதைத் தெரிவிக்கும். ஆவுடையார் கோயில் என்றும் காளையார் கோயில் என்றும் சுட்டப்படும் தலம் மாயவரம்-காரைக்குடி புகை வண்டிப் பாதையில் உள்ள அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து ஒன்பது மைல் தூரத்தில் விளங்குகின்றது. மாணிக்கவாசகர் இதனைச் சிவபுரம் எனவும் குறிப்பிடுகின் றார். இதற்கு, மேலும் அநாதி மூர்த்தி தலம், ஆதி கயிலாயம், உபதேசத் தலம், குருந்த வனம், சதுர் வேத புரம், ஞானபுரம், திரிமூர்த்திபுரம், தட்சிணக் கயிலைபுரம், தென்கயிலை, யோகவனம், யோகபீடபுரம் எனப் பிற பெயர்களும் அமைகின்றன. மாணிக்கவாசகர் பல இடங்களில் குறிப்பிடும் கோகழி என்பது திருப்பெருந் துறையையே என்பது மு.அருணாசலம் அவர்கள் கருத்து. இவர் பிறர் கூறும் பல பொருள்களையும் ஆய்ந்து இம் முடிவினை வழங்குகின்றார். பெருந்துறை ஊரைக் குறிப்பது என்பதும் அங்குள்ள கோயிலே கோகழி என்பதும், குருந்த மரத்தின் கீழ் சிவன் என்ற பொருள் இதற்கு என்பதும் இவரது எண்ணங்கள்.