கொள் என்னும் விகுதி

கொள் என்பது வினைப்பயன் வினைமுதலைச் சென்றடைத லாகிய தற்பொருட்டுப்
பொருட்கண் வந்த விகுதி. இதனை வடநூலார் ‘ஆற்பனேபதம்’ என்ப.
எ-டு : செய்துகொண்டான்.
இதன்கண், செய்தலாகிய வினையின் பயன் எழுவாயாகிய ஆண்பாற்பொருளையே
சென்றடைதல் உணர்த்தப்பட்டது. (சூ.வி. பக். 41)