கொளு

கொளுவாவது கருத்து. பின்னர் எடுத்துக்காட்டாக வரும் பாடலின்கருத்தைக்கொண்டு நிற்பது இது. கொளு சூத்திரம் எனவும்படும்.புறப்பொருள் வெண்பாமாலையுள் துறை யினை விளக்குவதாகப் புறப்பொருட்குஅமைந்தாற்போல, திருச்சிற்றம்பலக்கோவையாருள் கிளவிகள்தோறும் கூற்றினைவிளக்குவதாக அகப்பொருட்கும் கொளுக்கள் அமைந்துள்ளமை காணலாம்.திருவாரூர்க்கோவைக்கும் கொளுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.