கொல்லி என இலக்கியங்களில் இடம்பெற்ற ஊர்ப்பெயர் மலைப்பகுதி ஊராகும். ஊரின்பெயா் அவ்வூர் அமைந்த மலைப் பகுதிக்கோ. மலைப்பகுதியின் பெயர் அங்கே அமைந்த ஊருக்கோ பெயராக அமைந்திருக்க வேண்டும். கொல்லி மலைப் பகுதியில் அமைந்தது இவ்வூர். கொல்லிமலை ஓரி என்ற வள்ளலுக்குரியது. கொல்லிமலை சேலம் மாவட்டத்தில் நாமக்கல், ஆத்துரர் வட்டத்திலுள்ள ஒரு குன்றுத் தொடர். இம்மலையில் கொல்லிப் பரவை என்று ஒரு தெய்வப்படிமம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு பூதத்தால் அமைக்கப்பட்ட அழகிய பாவை என்று சங்க நூல்கள் கூறுகின்றன. கொல்லிக் கூற்றத்தில் தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பெழை அதிகமானோடு இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று மூரசுங்குடையுங் கலனுங் கொண்டான் என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.
“மாரி வண்ம௫ழ் ஓரிக் கொல்லிக்
கலிமயில் கலாவத்தன்ன இவள்..
ஒலிமென் கூந்தல் நம் வயினானே” (நற். 2657 9)
“கொல்லிக் கண்ணன்……” (குறுந், 34)
“பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கட் டெய்வம் குடவரை எழுதிய
நல்லியற் பாவை யன்ன” (குறுந், 89:46)
“காந்தள் அம்சிலம்பில் சிறுகுடி. பசித்தென
கடுங்கண் வேழத்தக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரிக் கொல்லிக் குடவரை” (௸. 1003 5)
“கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல் வற் றானை யதிகமானோ
டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று
மூரசுங் குடையுங் கலனுங் கொண்டு” (பதிற். எட்டாம்பத்து பதிகம் 2 5)
“கழைவிரிந்து எழுதரு பழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடி.த்தோர்ப் பொறைய”” (ஷே. 7314 15)
“முழவின் அமைந்த பெரும்பழம் மிசைந்து
சாறு அயர்ந்தன்ன, கார் அணியாணர்த்
துரம்பு அகம் பழுனிய தீம்பிழி மாந்தி
காந்தள் அம்கண்ணி செழுங்குடிச் செல்வர்
கலிமகழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்
கரும்பு ஆர் சோலைப் பெரும்பெயற் கொல்லி” (௸. 81119 24)
“களிறு கெழுதானைப் பொறையன் கொல்லி
ஒன்று நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பரவையின்
மடவது மாண்ட மாஅயோளே” (அகம். 62:13 169)
“…………………………………………..ஓரி
பல்பழம் பலவின் பயம்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாளும்
ஏர்.நுண் ஓதி மஅடியோளே” (ஷே. 208;21 24)
“ஒரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பலர்புகழ் பாவை அன்னநின் நலனே” (௸. 20914 17)
“ஏரிமருள் கதிர திருமணி இமைக்கும்
வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை
வேய்ஒழுக்கு அன்னசாய் இழைப் பணைத்தோள்” (௸. 213: 14 16)
“மறம்மிகுதானை பசும்பூண் பொறையன்
கார்புகன்று எடுத்த சூர்புகல் நனந்தலை
மாஇருங் கொல்லி ௨ச்சித்தாஅய்,
தகைத்து செல்அருவியின் அலர் எழப்பிரிந்தோர் (௸. 303;347)
“துன்னருந் துப்பின் வென்வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக் கொல்லி போல
தவா அரியரோநட்பே” (ஷே. 338:13 15)
“கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்’” (புறம். 158:5)