முக்காலத்துக்கும் பொதுவான வினைத்தொகையை ஒரு காலத்திற்குரிய
பெயரெச்சத் தொடராக விரித்தல் குன்றக் கூறலாம் என்று கருதி,
வினைத்தொகையை நிலைமொழி வருமொழியாகப் பகுத்தவழித் தொகைப்பொருள்
சிதையும் என்ற கருத்தான் ஆசிரியர் வினைத்தொகையைப் ‘புணரியல் நிலையிடை
உணரத் தோன்றாது’ என, ஒருசொல் நீர்மைய தாகவே கொண்டமையின், நச்.
வினைத்தொகையை ஒரு சொல்லாகக் காட்டும் எடுத்துக்காட்டுக்களொடு
குறிப்பிட் டுள்ளார். (தொ. எ. 24 நச்.)