கொற்கை

கொற்கை என்பது ஒரு துறைமுக நகரம்‌. பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில்‌ விளங்கியது. இத்துறையில்‌ விளைந்த முத்து கடல்‌ கடந்த நாடுகளில்‌ வாணிகப்‌ பொருளாக அமைந்த சிறப்பினது. செங்குட்டுவன்‌ காலத்தில்‌ வெற்றி வேற்‌ செழியன்‌ என்னும்‌ பாண்டியன்‌ கொற்கை நகரைத்‌ தலைநகராகக்கொண்டு அரசாண்டான்‌. இக்‌கொற்கை இப்பொழுது திருநெல்வேலி மாவட்டத்தில்‌ ஒரு சிற்றூராக உள்ளது. கி.பி. 80 இல்‌ நமது நாட்டுக்‌ கடற்கரையைப்‌ பார்வையிட்ட பெரிப்புளுஸ்‌ என்னும்‌ பயணநூலின்‌ ஆசிரியரான கிரேக்கர்‌ “கொற்கை என்பது கன்னியாகுமரிக்கு அப்பாலுள்ள துறைமுகம்‌, அங்கு முத்தெடுக்கும்‌ தொழில்‌ நடைபெறுகிறது. தண்டிக்கப்‌ பெற்ற குற்றவாளிகள்‌ அத்தொழிலைச்‌ செய்கின்றார்கள்‌. கொற்கை பாண்டி நாட்டைச்‌ சேர்ந்தது என்று எழுதியுள்‌ளமை இந்நகரம்‌ பாண்டி. நாட்டைச்‌ சார்ந்ததே என்ற கருத்தை வலியுறுத்தும்‌. முத்தெடுப்போர்‌ கொற்கையில்‌ ஒரு தனிச்‌சேரியில்‌ வாழ்ந்‌தனர்‌. அதைச்‌ சுற்றிலும்‌ மதுக்குடிப்போர்‌ வாழ்ந்த பாக்கம்‌ இருந்தது. திருச்செந்தூர்‌ கல்வெட்டு ஒன்றில்‌ “கொல்கை” என்ற குறிப்பு உள்ளதால்‌ ‘கொல்கை’ என்னும்‌ பெயரே “கொற்கை” ஆகியிருக்கவேண்டும்‌ என்று அறிஞர்‌ கால்டுவெல்‌ எண்ணுகிறார்‌. “கொல்‌ கை” எனப்‌ பிரித்துக்‌ கொலை செய்யும்‌ கை போன்றது என்று பொருள்‌ கொண்டார்‌. தொல்‌ முது மாந்தரின்‌ கொல்‌ கருவி கையாகவே இருந்ததாகலின்‌ அப்பெயர்ப்‌ பொருத்தத்தால்‌ கொற்கையாகி இருக்கவேண்டும்‌ என விளக்கினார்‌. கால்டு வெல்‌ அவர்களின்‌ திருநெல்வேலி வரலாற்று நூலை மொழி பெயர்த்த டாக்டர்‌ ந.சஞ்சீவி, கடற்கரைப்பட்டினமாகிய கொற்‌கைக்கும்‌ கடல்‌ அலைப்புக்கும்‌ உள்ள தொடர்பை எண்ணி, அலைகள்‌ கொல்லும்‌ (தாக்கும்‌) இடம்‌” கொற்கை என்று பொருள்‌ கண்டார்‌. இக்‌கருத்துப்‌ பொருத்தம்‌ உள்ளதாகத்‌ தோன்றவில்லை. கொல்‌ என்னும்‌ சொல்‌ கொலைத்‌ தொழிலோடு தொடர்பு கொண்டதாகக்‌ கருதுவது பொருந்தவில்லை. “கொண்டுழிப்‌ பண்டம்‌ விலையொரீஇக்‌ கொற்சேரி” (ஐந்திணை ஐம்பது 21.) கொற்‌ சேரித்‌ துன்னூசி விற்பவர்‌ இல்‌” (பழமொழி 51) இத்‌தொடர்களில்‌ ‘கொற்சேரி’ என்பது கொல்லுச்‌ சேரியைக்‌ குறிக்‌கும்‌. ஆகவே தொழிலைக்‌ கொண்டு, கொற்கைப் பெயர்‌ பெற்றது எனக்‌ கருதுவதைவிட கொல்லுத்‌ தொழில்‌ கொண்டே கொற்‌கைப்‌ பெயர் பெற்றிருக்க வேண்டும்‌ என்பர்‌.” ‘பொன்‌ செய்‌ கொல்லர்‌’ என்ற சங்க இலக்கியத்‌ தொடர்‌ பொன்‌ கொண்டு பணிசெய்வோர்‌ பொற்‌ கொல்லர்‌ எனப்பட்டதைக்‌ குறிக்கும்‌. படைக்கலம்‌ முதலிய கருவிகள்‌ செய்தல்‌. அணிகலம்‌ உண்கலம்‌ முதலாம்‌ கலங்கள்‌ செய்தல்‌, தெய்வத்‌ திருஉ௫ செய்தல்‌ ஆகியவை பொதுமைக்‌ கொல்லுத்‌ தொழில்‌. “காசு” என்னும்‌ நாணயம்‌ செய்யும்‌ தொழில்‌ தனிமைக்‌ கொல்லுத்‌ தொழில்‌. அரசர்‌ இருந்து கோன்மை செலுத்தும்‌ கோ நகர்க்‌ கண்ணே செய்யப்‌ பெறும்‌ சிறப்புக்‌ கொல்லுத்தொழில்‌. தங்க வேலை நடைபெறும்‌ இடம்‌ அக்கசாலை எனப்‌ பெறும்‌. கொற்‌கையில்‌ அக்கசாலை விநாயகர்‌ கோயில்‌ என்றே ஒரு கோயில்‌ உள்ளது. அக்கோயில்‌ கல்வெட்டு “மதுரோதைய நல்லூர்‌ அக்கசாலை ஈசுவரமுடையார்‌ கோயில்‌ தானத்திற்காக” என்று குறிக்கிறது. இன்றைக்கும்‌ அந்த விநாயகர்‌ கோயில்‌ நிலைவாயில்‌ மேற்கல்லில்‌ “அக்கசாலை ஈசுவரமுடையார்‌” என்னும்‌ கல்‌லெழுத்து விளங்குகிறது. அக்கோயிலைச்‌ சுற்றி தெருக்கள்‌ பதின்‌மூன்று இருந்தன என்றும்‌, அவையெல்லாம்‌ அக்கசாலைத்‌ தெருக்கள்‌ என்றும்‌ செவிவழிச்‌ செய்தி கூறுகிறது. கோயில்‌ குளத்தின்‌ வடபாலுள்ள ஊர்‌ ‘அக்கசாலை’ என்னும்‌ பெயருடன்‌ இன்றும்‌ விளங்குகிறது. ஆனால்‌, அக்கசாலை, அக்காசாலை ஆகி யுள்ளது. இக்காரணங்களால்‌ கொற்கை என்னும்‌ ஊர்ப்பெயர்‌ கொல்லுத்‌ தொழிலால்‌ பெற்ற பெயர்‌ என்பதே சரியான முடிபு. “கொற்கு” என்பது ஒரு மரப்பெயா்‌ என்றும்‌ அப்பெயர்‌ அடிப்படையில்‌ ‘கொற்கை’ எனப்‌ பெயர்‌ பெற்றது என்றும்‌ ஒரு கருத்து உள்ளது.
“தோள்புறம்‌ மறைக்கும்‌, நல்கூர்‌ நுசுப்பின்‌
உளர்‌ இயல்‌ ஐம்பால்‌ உமட்டியர்‌ ஈன்ற
கிளர்‌ பூண்‌ புதல்வரொடு கிலிகிலி ஆடும்‌
தத்துநீர்‌ வரைப்பின்‌ கொற்கைக்‌ கோமான்‌” (பத்துப்‌. சிறுபாண்‌, 59 62)
“விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்‌
இலங்குவளை இருஞ்சேரி
கட்‌ கொண்டிச்‌ குடிப்பாக்கத்து
நல்‌ கொற்கையோரா்‌ நசைப்பொருந'” (ஷே. மதுரைக்‌ 135 135)
“முத்துப்படு பரப்பின்‌ கொற்கை முன்துறை” (நற்‌. 23:66 )
“இருங்கழிச்‌ சேயிறா இனப்புள்‌ ஆரும்‌
கொற்கைக்‌ கோமான்‌ கொற்கையம்‌ பெருந்துறை“ (ஐங்‌. 188:1 2)
“மறப்போர்‌ பாண்டியன்‌ அறத்தின்‌ காக்கும்‌
கொற்கை அம்பெருந்துறை முத்தின்‌ அன்ன
நகைப்‌ பொலிந்து இலங்கும்‌ எயிறுகெழு துவர்வாய்‌'” (அகம்‌.27:8 10)
“நல்‌ தேர்‌ வழுதி கொற்கை முன்துறை” (ஷே, 130:11) 27.)
“வினை நவில்‌ யானை விநற்‌ போர்ப்‌ பாண்டியன்‌
புகழ்மலி சிறப்பின்‌ கொற்கை முன்துறை
அவிர்கதிர்‌ முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழையணிப்‌ பொலிந்த கோடு ஏந்து அல்குல்‌
பழையர்‌ மகளிர்‌ பனித்துறைப்‌ பரவ” (௸ 20:3 7)
“பேர்‌ இசைக்‌ கொற்கைப்‌ பொருநன்‌ வென்வேல்‌
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச்‌ செழியன்‌” (௸. 296:10 11
“இலங்கு இரும்‌ பரப்பின்‌ எறி சுறா நீக்கி
வலம்புரி மூழ்கு வான்திமிற்‌ பரதவர்‌
ஓலிதலைப்‌ பணிலம்‌ ஆர்ப்ப, கல்லென
கலிகெழு கொற்கை எதிர்கொள”’ (௸. 350:10 13)
“அன்று தொட்டுப்‌ பாண்டியனாடு மழைவறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயும்‌ குருவும்‌ தொடரக்‌ கொற்கையிலிருந்த வெற்றி வேற்செழியன்‌ நங்கைக்குப்‌ பொற்கொல்லர்‌ ஆயிரவரைக்‌ கொன்று களவேள்வியால்‌ விழவொடு சாந்தி செய்ய நாடுமலிய மழை பெய்து நோயும்‌ துன்பமும்‌ நீங்கயது”
“தண்செங்‌ கழுநீர்த்‌ துாதுவிரி பிணையல்‌
கொற்கை யம்‌ பெருந்துழை முத்தொடு பூண்டு”’ (ஷே. 14: 79 60)
“வாயிலோன்‌, வாழி யெங்‌ கொற்கை வேந்தே வாழி” (௸. 20 ;30)
“நற்றிறம்‌ படராக்‌ கொற்கை வேந்தே”” (ஷே. 20:66)
“கொற்கைக்‌ கொண்கன்‌ குமரித்துறைவன்‌” (௸. 23:11)
“கொற்கை யிலிருந்த வெற்றி வேற்செழியன்‌
பொற்‌ ரொழிற்‌ கொல்லர்‌ ஈரைஞ்ஞாற்றுவர்‌.
ஒருமூலை குறைத்த திருமா பத்தினிக்‌
கொருபகலெல்லை யுயிர்ப்பலி யூட்டி
உரைசெல வெறுத்த மதுரைமூதூர்‌” (௸. 27:127 131)
“தெற்கண்‌ குமரி ஆடிய வருவேன்‌,
பொன்‌ தேர்ச்‌ செழியன்‌ கொற்கை அம்போர்‌ ஊர்க்‌
காவதம்‌ கடந்து கோவலர்‌ இருக்கையின்‌
ஈன்ற குழவிக்கு இரங்கேன்‌ ஆகி,
தோன்றாத்‌ துடவையின்‌ இட்டனன்‌ போந்தேன்‌” (மணிமே, 13 : 83 87)