கொண்டுகூட்டு

ஒரு பாடலின் பல அடிகளிலும்உள்ள சொற்களைப் பொருள் பொருத்தமுறமுன்னும் பின்னும் கொண்டுகூட்டிப் பொருள் செய்வது.எ-டு : ‘தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனிஅஞ்சனத் தன்ன பசலை தணிவாமேவங்கத்துச் சென்றார் வரின்’இப்பாடற்கண், “அஞ்சனத்தன்ன பைங்கூந்தலையுடையா ளின் தெங்கங்காய்போலத் திரண்டுருண்ட வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனியின் பசலைவங்கத்துச் சென்றார் வரின் தணிவாம்” எனப் பல அடியிலும் நின்ற பலசொற்களையும் கொண்டுகூட்டிப் பொருள் செய்வது இப்பொருள்கோளாம்.கொண்டுகூட்டின்கண், தன்னிடத்துள்ள சொல்லாவது பொருளாவதுகொண்டுகூட்டிச் சொல்லப்படுவனவும், தன் னிடத்தில்லாத சொல்லாவதுபொருளாவது கொணர்ந்து கூட்டிச் சொல்லப்படுவனவும் என்ற இருவகைகள் உள.(யா. வி. பக். 393)