கொண்கானம்‌

கொண்கானத்தின்௧ண்‌ நன்னனின்‌ ஏழில்மலை இருந்ததாக சங்க இலக்கியம்‌ கூறுகிறது. ஏழில்மலை என்பது ஏழுமல என்று இப்பொழுது மலையாளத்தில்‌ கூறப்படுவதே. ஆகவே கொண்‌ கானம்‌ இன்றைய வடமலபார்ப்‌ பகுதியாகும்‌. இந்தக்‌ கொண்கானமே சிலப்பதிகாரத்தில்‌ கொங்கணம்‌ எனக்‌ குறித்துக்‌ கூறப்பெற்ற பகுதி என்பர்‌. காடும்‌ மலையும்‌ நிறைந்த பகுதியாகத்‌ தோன்றுவதால்‌ அந்த மன்னனின்‌ கானம்‌ கோன்கானம்‌ கோனுக்குரியகானம்‌, எனப்‌ பெயர் பெற்று, நாளடைவில்‌ கோன்‌ என்பது கொன்‌ என மருவி கொன்கானம்‌ என்று கொண்கானம்‌ என வழங்கப்‌ பெற்றதோ என்று ஒரு எண்ணம்‌ தோன்றுகிறது.
“பொன்படு கொண்கான நன்ன னன்னாட்‌
டேழிற்‌ குன்றம்‌ பெறினும்‌” (நற்‌. 391:6 7) |
கொங்கணர்‌ கலிங்கர்‌ கொடுங்கருநாடா்‌” (சிலப்‌. 25. காட்சிக்காதை. 156)
“கொங்கணக்‌ கூத்தரும்‌ கொடுங்கருநாடரும்‌”‘ (௸ 26. கால்கோட்காதை: 106)