திருநாவுககரசர் பாடல் பெற்ற தலம். இன்றும் கொட்டையூர் என்றே சுட்டப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஆமணக்குச் கொட்டைச் செடியின் கீழ் இலிங்கம் வெளிப்பட்டதனால் ஊர்ப்பெயர் கொட்டையூர் ஆயிற்று. சோழ மன்னனுக்குக் கோடி லிங்கமாகக் காட்சி தந்ததனால் கோடீச்சரம் என்ற பெயர் கோயிலுக்கு அமைகிறது. என்ற எண்ணம் இப்பெயர்க் காரணத்தைத் தருகிறது. இந்த ஊர்ச்செழிப்பையும் மக்கள் வாழ்நிலையையும் தருகின்றார் நாவுக்கரசர்.
குலைத் தெங்கம் சோலை சூழ் கொட்டையூரிற்
கோடீச்சரத் துறையும் கோமான் றானே 287-2
குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூர் 287-7
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூர் 287-10
இங்குள்ள கோயிலைக் கோட்டீச்சுரம் என்றனர். இதனையே திருநாவுக்கரசர் நன் கான கோடீச்சுரம் (258-8) என்று குறிக் கின்றாரோ எனத் தோன்றுகிறது,