கொடும்பை

இவ்வூர்‌ பாண்டி நாட்டின்‌ கண்ணது. சிலப்பதிகாரக்‌ காலத்‌lsல்‌ உறையூரிலிருந்து மதுரைக்குச்‌ செல்லும்‌ வழியிலிருந்ததென்று தெரிகிறது. கொடும்பை என்பது குளம்‌ என்னும்‌ பொருளையுடைய சொல்லாதலின்‌ இவ்வூர்ப்‌ பெயர்‌ நீர்நிலையால்‌ பெயா்‌ பெற்றதாகக்‌ கருதலாம்‌. பராந்தக நெடுஞ்செழியன்‌ (கி.பி. 768 815) வேள்விக்‌ குடிச்‌ செப்பேட்டில்‌ கொடும்பாளூர்‌ என்று இவ்வூர்‌ குறிக்கப்பெற்‌றுள்ளது. புதுக்கோட்டைப்‌ பகுதி குளத்தூர்‌ வட்டத்தில்‌, புதுக்கோட்‌ டைக்கு சுமார்‌ 25 மைல்‌ தொலைவில்‌ இப்பெபருடன்‌ பழைய ஊர்‌ ஒன்று உள்ளது. சோழரோடு உறவு பூண்டிருந்த இருக்கு வேளிர்களின்‌ தலைநகரமாகக்‌ கொடும்பாளூர்‌ இருந்திருக்கிறது. இறுதியில்‌ முஸ்லீம்களால்‌ அழிக்கப்பட்டதாகத்‌ தெரிகிறது.” இராசசிம்மன்‌ (8. பி. 907 931) சன்னமனூர்ப்‌ பெரிய செப்‌பேட்டில்‌ கொடும்பைமாநகர்‌ என்று இவ்வூர்‌ குறிக்கப்பெற்றுள்ளது.
“நெடும்‌ பேரத்த நீந்திச்‌ சென்று
கொடும்பை நெடுங்குளம்‌ கோட்டகம்‌ புக்கால்‌” (சிலப்‌.காடு காண்காதை. 69 70)