அக்கரை கண்ணிக்கொடுகூரை எறிந்தான் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்ற செய்தி கொடுகூர் அக்கரையில் இருந்தமையைப் புலப்படுத்துகிறது. ஒடுங்குதல் அல்லது பொருந்துதல் என்னும் பொருளை யுடைய கொடுகு என்ற பகுதியைப் பெற்ற கொடுகூர் என்ற ஊர்ப் பெயர், அக்கரையில் பொருந்தியிருந்தமையால் பெற்ற பெயரோ என எண்ண இடமளிக்கிறது.
“அக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து
பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின்
மூழாரை முழுமுதல் துமியப் பண்ணி”. (பதிற். ஐந்தாம்பத்து, பதிகம் 12 14)