கொச்சத்துள் முச்சீரடி வருதல்

எ-டு : ‘தஞ்சொல் வாய்மை தேற்றி’ என்றபாடல்.இஃது அடிதோறும் முச்சீர் நிகழும் நாலடிப்பாடல். பிற்காலயாப்பிலக்கணநூலார் இதனை வஞ்சிப்பாவிற்கு இனமாகிய வஞ்சிவிருத்தம் என்ப.(தொ. செய். 155 நச். உரை)