‘தரவின்றாகித் தாழிசை பெற்றும்,தாழிசை இன்றித் தரவுஉடைத் தாகியும்,எண்இடை யிட்டுச் சின்னம் குன்றியும்,அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும்’யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைத்தாய்க் கொச்சக ஒருபோகுவரும். (தொ. செய். 149. நச்.)எனவே, ஒத்தாழிசை உறுப்புக்களுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவனகொச்சக ஒருபோகு எனப்பெயர்பெறும்; தனிச்சொல்லின்றி எண் இடையிட்டுவரினும் ஒருபோகு எனப்பெயர் பெறும். (143, 140 இள.)தரவின்றி தாழிசை முதலிய உறுப்புக்கள் பெற்றும், தாழிசை இன்றித்தரவு முதலிய உறுப்புக்கள் பெற்றும், தனித்தரவு தானே வரினும், தாழிசைதானே வரினும், எண்ணுறுப்புப் பெற்றுத் தனிச்சொல் வாராது போயினும்,எண்ணுறுப்பி னுள் இடையெண் சிற்றெண் என்பன குறையினும் சுரிதகம் இன்றித்தரவுதானே நிமிர்ந்து ஒழுகி முடியினும், ஒத்தாழி சையின் யாக்கப்பட்டயாப்பினும் அதற்கு உரித்தாக ஓதப் பட்ட கடவுள் வாழ்த்துப்பொருண்மையின்றிக் காமப் பொருளாக வரினும் கொச்சக ஒருபோகுஎனப் பெயர்பெறும். (143 இள.)