கொச்சக ஒருபோகினைப் பாவினங்களுள்அடக்காமை

கொச்சக ஒருபோகுகளை ஒரு வரையறைப்படுத்துப் பாத் தொறும் இனம்சேர்த்திப் பண்ணிற்குத் திறம்போலப் பாவிற்கு இனமாகப் பின்னுள்ளஆசிரியர் அடக்குவர். அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்த ஆசிரியர்அவ்வாறு அதனை அடக்காமைக்குக் காரணம் கூறுவர். அவர் கூறுமாறு :‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே!’இஃது ஈரடியான் வருதலின் குறட்பாவிற்கு இனமாகிய வெண்செந்துறையெனின், ஈற்றடி ஒருசீர் குறைவின்றி வருதலின், வெண்பாவிற்கு இனமாகாது;கலிப்பாவின் ஒரு கூற்றுக்கே இனமாகும்; இது சீரானும் தளையானும்ஆசிரியத்துக்கே இனமாம்.“அறுவர்க் கறுவரைப் பயந்தும் கவுந்திமறுவறு பத்தினி போல்வை கினீரே”இது சந்தம் சிதைந்து புன்பொருளாய் வருதலின் குறட் டாழிசை எனின்,தாழம்பட்ட ஓசையும் விழுமியபொருளும் இல்லனவற்றுக்குத் தாழிசை என்பதுபெயராதல் வேண்டும்.அங்ஙனம் கொள்ளின், சிறப்பாகக் கொள்ளப்படும் ஒத்தாழிசைக் கலியின்தாழிசைகளுக்கும் சந்தம் சிதைதலும் புன்பொருளாய் வருதலும்உரியவாகிவிடும். அதனால் குறட்டாழிசை என்ற பெயர் பொருந்தாது.‘கன்று குணிலா’ (சிலப்.ஆய்ச்சியர் குரவை) என்ற தாழி சைகள் மூன்றும்ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வெண்டளை யாக வருதலின், ஆசிரியத்திற்கு இனம்ஆகா; இவை அந்நிலத் தெய்வத்தைப் பரவுதலின் கைக்கிளை அல்ல.‘நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றிஉருப்பிற் பொடிபட் டுருவிழந்த காமன்அருப்புக் கணையான் அடப்பட்டார் மாதர்விருப்புச் செயநின்னை வேண்டுகின் றாரே’இதனை நான்கடியான் வருதலின் கலிவிருத்தம் என்பர். இது வெண்டளைதட்டலின் வெண்டாழிசை எனவும் கூறலாம். கலித்தளை இன்மையின் கலிக்கு இனம்என்றல் பொருந்தாது.குறளடி நான்கு ஒருபொருள்மேல் மூன்றடுக்கின் வஞ்சித் தாழிசை;தனித்துவரின் வஞ்சித்துறை; சிந்தடி நான்குவரின் வஞ்சி விருத்தம் என்ப.அவை நான்கடியான் வருதலானும் பா வேறுபடுதலானும் சீர் இயற்சீர் ஆகலானும்வஞ்சியொடு சிறிதும் தொடர்புடையன ஆகா. மேலும் தாழிசை துறை என்றுவஞ்சியுட் படுத்துதற்கு எவ்விதக் காரணமும் இன்று.இங்ஙனம் இனம் சேர்த்துதற்கு அரியனவற்றைப் பெரும்பா லும் கலியோசைகொண்டமை நோக்கிக் கொச்சகம் என அடக்கினார் தொல்காப்பியனார்.இக்கொச்சகம் வரையறுக்கப்படவே, ஆசிரியமும் வெண்பா வும்ஒருபொருள்மேல் பல மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதும் பத்துமாகி வருதலும்பிறவாறு வருதலும் வரையறை இல. அவை ஐங்குறுநூறு, முத்தொள்ளாயிரம்,கீழ்க்கணக்கு முதலியவற்றுள் அடங்கும். (தொ. செய். 149.நச்.)