கொச்சகம் (2)

பல கோடுபட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப ஆதலின், அதுபோலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்பஅடுக்கியும் வரும் செய்யுளைக் கொச்சகம் என்றார். இஃது ஒப்பினாகியபெயர் இக்காலத்து இது மகளிர்க்கு உரியதாய்க் ‘கொய்சகம்’ என்றுவழங்கிற்று. இது முறையே சுருங்கி வரும் எண்ணுப் போலாது அடியும் சீரும்தளையும் வேறுபட்டு வரும். (தொ. செய். 152 நச்.)