கொச்சகம் (1)

சிறப்பில்லதனைக் கொச்சை என்பது போலச் சிறப்பில்லாதசெய்யுளுறுப்புக் கொச்சகம் எனப்பட்டது.(தொ.செய். 121 நச்.)கொச்சகம் என்பது ஒப்பின் ஆகிய பெயர். ஓராடையுள் ஒருவழி அடுக்கியதுகொச்சகம் எனப்படும். அதுபோல ஒரு செய்யுளுள் பலகுறள் அடுக்கப்படுவதுகொச்சகம் எனப் படும். (பேரா.)கொச்சகமாவது ஐஞ்சீர் அடுக்கி வருவனவும், நால்வகைப் பாக்களின் அடி,சொற்சீரடி, முடுகியலடி என்னும் அறுவகை யடியானும் அமைந்த பாக்களைஉறுப்பாக உடைத்தாகி வருவனவுமாகு, வெண்பா இயலான் புலப்படத் தோன்றும்.பரிபாடலுள் கொச்சகம் வருவழித் தரவும் சுரிதகமும் இடையிடையேயும்வரப்பெறும். (பேரா.)