கொச்சகமும் உறழ்கலியும்

கொச்சகக்கலியின் ஒருவகை, சுரிதகம் இன்றி யாப்பினும் பொருளினும்வேற்றுமையுடைத்தாய் வரும். உறழ்கலியும் சுரிதகம் இன்றி யாப்பினும்பொருளினும் வேறுபட்டு வரும் எனவே, உறழ்கலி கொச்சகக்கலியுள்அடங்குமெனின், கொச்சகக்கலி சுரிதகம் இன்றி வரின் அடிநிமிர்ந்துஒழுகும்; அங்ஙனம் அடிநிமிர்ந்து ஒழுகிசைத்தாய் வரும் கொச்சகக் கலிபோலாது, உறழ்கலி அடி நிமிராதும் ஒழுகிசையின்றியும் வரும். ஆதலின்கொச்சகக் கலியுள் உறழ்கலி அடங்காது. (தொ. செய். 130 பேரா.)