1. தரவு ஒன்றாகிச் சுரிதகம் பெற்று வருவது சுரிதகத் தரவுசொச்சகம்.எ-டு : ‘குடநிலைத் தண்புறவில்’2. தரவு ஒன்றாகிச் சுரிதகம் இல்லாது வருவது இயல்தரவு கொச்சகம்.எ-டு : “செல்வப்போர்க் கதக்கண்ணன்”3. தரவு இரட்டித்துச் சுரிதகம் பெற்று வருவது சுரிதகத் தரவிணைக்கொச்சகம்.எ-டு : ‘வடிவுடை நெடுமுடி’4. தரவு இரட்டித்துச் சுரிதகம் இல்லாது வருவது இயல் தரவிணைக்கொச்சகம்.எ-டு : ‘வார்பணியத் தாமத்தால்’5. ஈற்றடி குறையாத சிலதாழிசையால் வருவது இயல் சிஃறாழிசைக்கொச்சகம்.எ-டு. : ‘பரூஉத் தடக்கை’: இதன்கண், தாழிசை ஒவ்வொன்றன் முன்னரும்தனிச்சொல் வந்தது.6. ஈற்றடி குறைந்த சில தாழிசையால் வருவது குறைச் சிஃறாழிசைக்கொச்சகம்.எ-டு : ‘மாயவனாய்’: இதன்கண், தாழிசை ஒவ்வொன்றன் முன்னரும்தனிச்சொல் வருதலொடு, தாழிசையும் ஈற்றடி ஒருசீர் குறைந்துவந்தது.7. ஈற்றடி குறையாத பல தாழிசையால் வருவது இயல் பஃறாழிசைக்கொச்சகம்.எ-டு : ‘தண்மதியேர்’: தாழிசைகள் ஆறு வந்திருப்பதால்பஃறாழிசை.8. ஈற்றடி குறைந்த பல தாழிசையால் வருவது குறைப் பஃறாழிசைக்கொச்சகம்.இதன்கண், தாழிசை ஆறும் ஈற்றடி ஈற்றுச்சீர் குறைந்து வரல்வேண்டும்.9. கலிக்கு ஓதப்பட்ட உறுப்புக்கள் மயங்கி வருவது இயல் மயங்கிசைக்கொச்சகம்.எ-டு : ‘மணிகிளர் நெடுமுடி’ – இது தரவு இரட்டித்து, தாழிசைஆறும் தனிச்சொல்லும் அராகம் நான்கும், பெயர்த்தும் ஆறு தாழிசையும்,தனிச்சொல்லும், எட்டு இருசீரோரடி அம்போதரங்கங்களும், தனிச் சொல்லும்,சுரிதகமும் இவ்வாறு கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்புக்கள் மிக்கும்குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தது.10. பிறபாவினொடு மயங்கி வருவது அயல் மயங்கிசைக் கொச்சகம்.எ-டு.: ‘காமர் கடும்புனல்’ – இது வெண்பாப் பலவும் மயங்கி ஆசிரியஅடியும் விரவி வந்தமையால் அயல் மயங்கிசை யாயிற்று. (கலி. 39. நச். உரைகாண்க.)எ-டு : ‘நறுவேங்கைத் துறுமலர்’இஃது இருசீரடியும் முச்சீரடியுமாய் வரும் பிரிந்திசைக்குறள்எனப்படும் அம்போதரங்க அடிகளும், அந்தாதித் தொடை யாகிய அராக அடிகளும்,தனிச்சொற்களும் விரவி மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும்இடையிடை ஆசிரியங் களும் வெண்பாக்களும் மயங்கி வந்த அயல் மயங்கிசைக்கொச்சகம். (யா. க. 86 உரை)