கொச்சகம் போல மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும்கிடக்கும் உறுப்பிற்று ஆகலானும், கலியோசைக்குச் சிறப்பில்லாத நேரீற்றுஇயற்சீரை யுட்கொண்டு நிற்றலானும் கொச்சகக்கலி என்பதும் காரணக்குறி.சிறப்பில்லாததனை ஒருசாரார் கொச்சை எனவும் கொச்சகம் எனவும்வழங்குப.ஒத்தாழிசைக்கலி சிறப்புடைத்தாகலின் முன்னர் வைக்கப்பட் டது.வெண்கலி அளவிற்படாத அமைதித்தாய் ஈற்றடி முச்சீராதலின் இடைக்கண்வைக்கப்பட்டது. கொச்சகக்கலி சிறப்பின்மையின் இறுதிக்கண்வைக்கப்பட்டது. (யா. க. 79. உரை)