தரவே வந்தும். தரவு இரண்டாய் வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசைபல வந்தும், தரவு முதலிய ஆறுறுப்பும் தம்முள் மயங்கியும்,வெண்பாவினொடும் ஆசிரியத்தினொ டும் மயங்கியும், தனிச்சொல் இடையிடையேவந்தும், அம்போதரங்க உறுப்பும் சுரிதகமும் அருகி வந்தும், கலிக்குஓதப்பட்ட பொதுமுறையில் மாறிவருவன கொச்சகக் கலிப்பாக்களாம். (யா. க.86. உரை)