அகநிலைக் கொச்சகக் கலிப்பா, கொச்சக ஒருபோகின் இலக்கணங்களுள்‘தரவின் றாகித் தாழிசை பெற்றும்’ என்ற ஒன்று நீங்கலாக ஏனைய எல்லாஇலக்கணங்களையும் பெறும்; விரவுறுப்புடைய கலிவெண்பாவின் இலக்கணங்களையும் பெறும். ஆதலின் இவ்வகநிலைக் கொச்சகக் கலிப்பா தரவும் போக்கும்பாட்டும் இடைமிடைந்தும் பாட்டுக் கொச்சகமாகவும் இடையிடையேகொச்சகத்தில் ஐஞ்சீரடியும் அறுசீரடியும் பெற்றும் வருதலுண்டு. இதன்கண்இடையே வரும் பாட்டுக்கள் வெண்பாவிற் சிதைந்து ஓசையும் பொரு ளும்வேறாகலின் கொச்சகம் எனப்பட்டன.தரவு இணைந்து வாராது யாப்பின் வேறுபட்டு ஒருதரவே வருதலும், தரவுஇணைந்து சுரிதகம் இன்றி வருதலும், தரவு இணைந்து தனிச்சொல்லும்சுரிதகமும் உடன்பெறுதலும், ஒத்தாழிசை மூன்றடுக்கினும் ஒவ்வொரு தாழிசைமுன்னும் தனிச்சொல் வருதலும், தேவபாணி ஆகாதவழிக் காமப் பொருளைப் பற்றிவாராது அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருளும் பற்றிவருதலும், பாக்களின் அமைப்பில் வேறுபட்டு வருதலும் இவ்வகநிலைக் கொச்சகத்துள் அடங்கும்.எ-டு : “செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு’ (கலி.19)என்பது சுரிதகம் பெறாத தரவிணைக் கொச்சகம். கொச்சகம் வெண்பாவாயும்வருதலானும், தாழிசையொடு தொடராது வருதலானும் இவை கொச்சகம் ஆயின.ஒருபொருள் நுதலி இவ்வாறு வரினும் கொச்சகம் எனலாம்.எ-டு : ‘மாமலர் முண்டகம்’ (கலி.3.)இது தனிச்சொல் இன்றி ஆசிரியச்சுரிதகம் பெற்ற தரவிணைக்கொச்சகம்.எ-டு : “மின்னொளிர் அவிரறல்’ (கலி.55)இது தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்ற தரவிணைக்கொச்சகம்.எ-டு : ‘வெல்புகழ் மன்னவன்’ (கலி. 118)இது தாழிசைதோறும் முதற்கண் சொற்சீரடியாகத் தனிச் சொற்கள் பெற்றுவருதலின் ஒத்தாழிசை இலக்கணம் இன்றி, எண்ணிடையிட்டுச் சின்னம் குன்றியகொச்சகம்.சீவகசிந்தாமணி முதலிய நூல்கள் கொச்சகம் பல அடுக்கிப்பொருள்தொடர்நிலையாய், அறம்பொருள் இன்பம் என்பன விராய்ப் பொருள்வேறுபடவரும் தரவுக் கொச்சகங்களாம்.எ-டு : ‘கொடியவும் கோட்டவும்’ (கலி. 54)இஃது ‘அதனால்’ என்னும் தனிச்சொல் பெற்று அடக்கியல் இல்லாச்சுரிதகத்தோடு அடிநிமிர்ந்தது.எ-டு : ‘பால்மருள் மருப்பின்’ (கலி.21)இஃது ‘அவற்றுள்’ எனத் தொடங்கும் ஐஞ்சீரடி வந்து, தனிச் சொல்லும்அடக்கியலும் இன்றிச் சுரிதகம் பெற்று அடி நிமிர்ந்தோடிற்று.எ-டு : “அகன்ஞாலம் விளக்கும்’ (கலி.119)இது, தனிச்சொல்லும் அடக்கியலும் இன்றிச் சுரிதகம் பெற்றுஅடிநிமிர்ந்தோங்கியது.எ-டு : மன்று பார்த்துநின்ற தாயைக்கன்று பார்க்கும்இன்றும் வாரார்’இஃது இருசீர் நான்கடித் தரவுகொச்சகம்எ-டு : ‘தஞ்சொல் வாய்மை தேறிஅஞ்சல் ஓம்பென் றகன்றவஞ்சர் வாரா ராயின்நெஞ்சம் நில்லா தேகாண்’இது முச்சீர் நான்கடித் தரவு கொச்சகம்.‘நீரலர் தூற்றத் துயிலா நெடுங்கங்குல்வாரல ராகி யவரோ வலித்தமைந்தார்ஆரலார் நாரைகாள் அன்றில்காள் அன்னங்காள்ஊரலர் தூற்றயான் உள்ளம் உகுவேனோ?இது நாற்சீர் நான்கடித் தரவு கொச்சகம்.‘கன்னி ஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்டபொன்னங் கொடியை ஈன்றோ ரில்லை போலுமால்மன்னன் காக்கும் மண்மேல் கூற்றம் வரஅஞ்சிஅன்ன தொன்று படைத்தா யாயின் எவன்செய்கோ?’இஃது ஐஞ்சீர் நான்கடித் தரவு கொச்சகம்.’திருவளர் தாமரை’ (கோவை1)‘போதோ விசும்போ’ (கோவை2)இவை அடிதொறும் பதினேழ் எழுத்தும் பதினாறு எழுத்துமாக வந்ததரவுகொச்சகம்.‘குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெம்கூத்தப்பிரான்கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்கும்கருங்கட்செவ்வாய்மயிலைச் சிலம்பகண் டியான்போய் வருவன்வண் பூங்கொடிகள்பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே’(கோவை.30)என்பதன் மூன்றாமடியும்,‘காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணரொக்கல்சீரணி சிந்தா மணிஅணி தில்லைச் சிவனடிக்குத்தாரணி கொற்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்ஊரணி உற்றவர்க் கூரன்மற்றி யாவர்க்கு மூதியமே’(கோவை-400)என்பதன் நான்காமடியும் ஒரோ எழுத்து மிக்க தரவு கொச்சகம். (மிக்ககுற்றிய லிகரங்கள் எழுத்தெண்ணப் படாவாகும்)‘காண்பான் அவாவினாற் காதலன் காதலிபின் நடவா நிற்பநாண்பால ளாகுதலான் நன்னுதறன் கேள்வன்பின் நடவா நிற்பஆண்பான்மை குன்றா அயில்வே லவன்தனக்கு மஞ்சொ லாட்கும்பாண்பால் வரிவண்டு பாடு மருஞ்சுரமும் பதிபோன் றன்றே”இஃது அறுசீர் நான்கடிக் கொச்சகம்.‘இலங்கொளி வெண்மருப்பின் இட்டகை தூங்கவோ ரேந்தல் யானைகலங்கஞர் எய்திக் கதூஉம் கவளம் கடைவாய் சோரச்சிலம்பொழி குன்றென நின்றது செய்வ தெவன்கொ லன்னாய்’இஃது அறுசீர் மூன்றடிக் கொச்சகம்.‘தண்ணந் துறைவன் தார்மேல் போனவண்ண வண்டு வாரா தன்றேவண்ண வண்டு வாரா தாயின்கண்ணியும் நில்லாதே காண்’இது நான்கடி ஆசிரியத்துள் இறுதி முச்சீரான் வந்து யாப்பு வேறுபட்டகொச்சகம்.‘நிணங்கொள் புலா லுணங்கு’ என்ற கானல் வரிப்பாடல் (சிலப்.)மூன்றாமடி நாற்சீர்த்தாய், ஏனைய மூன்றடிகளும் அறுசீர் பெற்று வந்தது.இஃது ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருதலுமுண்டு. இதுவும் கொச்சகம்.‘கோடல்விண்டு கோபமூர்ந்த கொல்லைவாய்மாடுநின்ற கொன்றையேறி மௌவல்பூத்த பாங்கெலாம்மாடுமஞ்ஞை அன்னசாய லாயவஞ்சொல் மாதராய்ஆடல்மைந்தர் தேரும்வந்து தோன்றுமே’.இது நடு ஈரடி மிக்கது.‘இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனாஅரங்கம் அணிபொழிலா ஆடும்போலும் இளவேனில்அரங்கம் அணிபொழிலா ஆடுமாயின்மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்’இஃது இடைமடக்கி ஓரடி நீண்டும் ஒன்று குறைந்தும் வந்தது.‘புன்னை நீழல் நின்றார் யார்கொல்அன்னை காணின் வாழாளே தோழி’.‘மல்லல் ஊர! இவ்வில் அன்றால்பல்பூங் கோதை யில்’.இவை ஈரடியாய், ஈற்றடி குறையாதும் குறைந்தும் வந்தன.‘கொய்தினை காத்தும் குளவி அடுக்கத் தெம்பொய்தல் சிறுகுடி வாரன் ஐய! நலம்வேண்டின்’.இஃது ஈரடியாய் ஈற்றடி மிக்கது. இதுவும் ஒருபொருள்மேல்மூன்றடுக்குதலும் உண்டு.‘வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரியகடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம்கொடிபடு வரைமார்பின் கோழியார் கோமானே!துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் தொடர்புண்டாங்(கு)இணைமலர்த்தார் அருளுமேல் இதுவிதற்கோர் மாறென்றுதுணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரே.அதனால்,செவ்வாய்ப் பேதை இவடிறத் (து)எவ்வா றாங்கொலி தெண்ணிய வாறே?’இது தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்றுப் பொருள் வேறுபட்டதரவிணை.‘ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம்’ (கலி.47)என்பது சொற்சீரும் தனிச்சொல்லும் வந்து, இடைநிலைப் பாட்டிலும்ஒன்று ஓரடிமிக்கு ஒருபொருள்மேல் மூன்று வருதலின் ஒத்தாழிசை ஆகாதுகொச்சகமாய்க் கலிவெண் பாட்டின் வேறாயிற்று.‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி.7)இது கலிவெண்பாவிற்குரிய உறுப்புப் பெற்றதேனும் தரவு வெண்பாவாய்,ஒழிந்தன வெண்பா அன்மையின் கொச்சக மாயிற்று.‘காமர் கடும்புனல்’ (கலி. 39)இது கொச்சகங்கள் வெண்பாவாய்ச் சில உறுப்புக்கள் துள்ளல் ஓசைவிராய்த் தளை ஒன்றிய கொச்சகமாய் ஒழிந்த பாவும் மயங்கிச் சுரிதகமும்முடுகிவருதலின் கொச்சக மாயிற்று.‘காலவை, சுடுபொன் வளைஇய’ (கலி. 85)இஃது இடைநிலைப்பாட்டே முழுதும் வந்தது. இஃது உறழ் பொருட்டுஅன்மையின் கொச்சகம். (தொ. செய். 155 நச்.)