கையனார் என்பவர் இயற்றிய இந்நூற்கருத்துக்கள் யாப் பருங்கலவிருத்தியுள் மேற்கோளாக எடுத்தியம்பப் பெற்றுள. மெய்யின் மாத்திரை அரைஎன்பது, ஆய்தம் சொற்களில் அமையும் இடம், இயைபுத்தொடைக்குஎட்டுவிகற்பங்கள், நேரிசை ஆசிரியப் பாவிற்கு எடுத்துக்காட்டு,இடைப்புணர் முரணுக்கு எடுத்துக்காட்டு ஆகிய கையனார் யாப்புச்செய்திகள் அதன்கண் இடம் பெறுகின்றன.“நாற்சீரடிக்கண் முதல் அயற்சீர்க்கண் தொடை இல்லதனைக் கீழ்க்கதுவாய்எனவும், ஈற்றயற்சீர்க்கண் தொடையில்லதனை மேற்கதுவாய் எனவும் வேண்டினார்கையனார் முதலிய ஒரு சார் ஆசிரியர்” என யாப்பருங்கலக்காரிகையுரைகையனார் யாப்பு நூற் செய்தியைச் சுட்டுகிறது. (யா. வி. பக். 23, 27,138, 159; யா. கா. 19. உரை)