கைந்நொடி அளவு

கட்டைவிரலை நடுவிரலில் ஊன்றி இரண்டனையும் முறுக்கி
ஒலியெழுப்புதற்கண் நிகழும் கால இடைவெளியும், எழுத்தின் அளவாகிய
ஒருமாத்திரை கால இடைவெளியும் ஒன்றாகும். இவ்வாறு ஒலிஎழுப்புதற்கண்,
நினைத்தமாத்திரையானே கால்மாத்திரையும், கட்டைவிரலை நடுவிரலில்
ஊன்றியவழி அரை மாத்திரையும், முறுக்கியவழி முக்கால் மாத்திரையும், ஓசை
எழுப்பியவழி ஒரு மாத்திரையும் ஆகிய காலக்கழிவு நிகழும் என்ப.
நொடித்தல்தொழிலில் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும், அ
எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். (தொ. எ. 7
நச். உரை)