கைக்கிளை

ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் பாடுவது கைக்கிளைச்செய்யுளாம்.பிரபந்த மரபு, பன்னிரு பாட்டியல் இவை கைக்கிளைமாலை எனச்சுட்டுதலின் (பி.ம.30, பன்.பாட்.295), பாடல்கள் அந்தாதித் தொடையுறவருதல் வேண்டும்போலும்.ஒருதலைக் காமத்தினை முப்பத்திரண்டு வெண்பாவாற் பாடுதலும்கைக்கிளைப் பிரபந்தம் என்ப. (மு. வீ. யா. ஒ. 149; தொ. வி. 283உரை)