கைக்கிளை மருட்பா அல்லாத மருட்பாப் புறநிலைவாழ்த்து, வாயுறைவாழ்த்து, செவியறிவுறுத்தல் ஆகிய பொருண்மை பற்றி அடிவரையறை இன்றிவரும்; முதலில் வெண்பா இயலிலும் இறுதியில் ஆசிரிய இயலிலும் வரும். இவைபுறத்திணையிலேயே வரும். மருட்பாவில் உள்ள இரண்டு பாவும் இயற்சீரான்வருதல் சிறப்பு.இதன்கண் வரும் வெண்பாவின் குறைந்த அளவு ஏழுசீர்; வெண்பா நாலடிமுதல் பன்னீரடி முடிய உயர்ந்து வருதல் சிறப்பு. வெண்பா பன்னீரடியின்இகந்து வரினும், மருட்பா வில் வரும் ஆசிரியம் மூன்றடியின் இகவாது;ஈற்றயலடி முச்சீர்த்தாகவே வரும்.எ-டு : ‘தென்ற லிடைபோழ்ந்த ’ என்ற பாடல் புறநிலை.‘பலமுறையும் ஓம்பப்படுவன’ என்ற பாடல் வாயுறை.‘பல்யானை மன்னர் முருங்க’என்ற பாடல் செவியுறை.(தொ. செய். 161. நச்.)