கூழை நிரல்நிறை

நாற்சீரடியின்கண், முதல்மூன்று சீர்களிலும் நிரல் நிறை அமைதல்.எ-டு : ‘கண்ணும் புருவமும் மென்தோளும் இம்மூன்றும்வள்ளிதழும் வில்லும் விறல்வேயும்வெல்கிற்கும்’இவ்வடிகளில், முதல் மூன்று சீர்களிலும், கண் இதழ் – புருவம் – வில்- தோள்வேய் – என நிரல்நிறை முறையே அமைந்தவாறு. (யா. க. 95 உரை)