நாற்சீரடியின் முதல் மூன்று சீர்களும் மோனை எதுகை முரண் அளபெடைஎன்னும் தொடை பெற்று வருதலாகிய சீரிடை அமைந்த தொடை விகற்பம். இயைபுத்தொடை, ஈற்றுச் சீரையே முதற்சீராகக் கொண்டு கணக்கிடப் பெறு தலின்,முதற் சீரொழித்து ஏனைய மூன்று சீரிலும் வருதலே கூழை இயைபுத்தொடைவிகற்பமாகக் கொள்ளப் படும். கூழைமோனை முதலிய விகற்பங்களைத் தனித்தனித்தலைப்பிற் காண்க. (யா. க. 45)