கூன்

செய்யுளடியின் அளவிற்கு உட்படாது வரும் அசையும் சீரும் ‘கூன்’எனப்படும். வஞ்சியடியின்கண் நான்கு அசையும் கூனாக வரப்பெறும். முதல்இடை கடை என மூவிடத்தும் கூன் வரப்பெறும்.எ-டு. :‘வாள், வலந்தர மறுப்பட்டன’ (புறநா.4) – நேர்‘அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன’ – நிரை‘வண்டு, மலர்தேர்ந்து வரிபாடின – நேர்பு‘களிறு, கதவெறியாச் சிவந்துரைஇ’ (புறநா.4) – களிறு -நிரைபு.இவை வஞ்சியடியில் முதற்கண் நான்கு அசையும் கூனாக வந்தவாறு.இனிச் சீர் கூனாதல் ஏனைய மூவகைப் பாவிற்கும் உரித்து. சீர்அடிமுதற்கண்ணேயே கூனாக வரப்பெறும்.‘அவரே,கேடில் விழுப்பொருள் தருமார் பரிசிலைவாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந்.216)‘உதுக்காண்,சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்’‘உலகினுள்,பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்’இவ்வாறு முறையே ஆசிரியம், வெண்பா, கலி என்னும் மூன்று பாவிலும்அடிமுதற்கண் சீர் கூனாயிற்று. (தொ. செய்.48, 49. நச்)