கூத்தர் ஆற்றுப்படை

நால்வகை ஆற்றுப்படையுள் ஒன்று. (ஏனைய மூன்றுமாவன: பாணாற்றுப்படை,பொருநர் ஆற்றுப்படை, விறலியாற்றுப் படை என்பன.) வள்ளல்ஒருவனிடம்பரிசில் பெற்று மீளும் ஒரு கூத்தன், தான் வழியிற் கண்ட ஓர் ஏழைக்கூத்தனை நோக்கித் தனக்கு நிறைய வழங்கிய வள்ளலிடம் அவனும் சென்றால்வறுமை தீரப் பரிசில் பெற்று வாழலாம் எனக்கூறி, அவனை அவ்வழியில்செல்லுமாறு கூறுதல். ஆறு – வழி; படை – படுத்துதல்; தான் சென்றவழிக்கண்அவனும் சென்று பரிசில் பெறுமாறு செலுத்துதல் ஆற்றுப்படைப் பிரபந்தம்என்பது. (பு. வெ. மா. 9 : 29)