நான்கா மடியிலுள்ள எழுத்துக்கள் யாவும் ஏனை மூன்றடி களுள்ளும்மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி. ‘கூடசதுக்கம்’ என்பதும்அது. (தண்டி. 95)நாலடியாய ஒரு செய்யுளில் நாலாம் பதம், ஏனைய மூன்று பதத்தையும் மேல்நின்று கீழும் கீழ்நின்று மேலுமாக எழுதி முடித்த வரி மூன்றில்இடைவரியின் மறைந்து நிற்பது. (பதம். அடி) கூடசதுர்த்தமாம்.எ-டு :‘நாதா மானதா தூய தாருளாணீதா னாவா சீராம னாமனாபோதா சீமா னாதர விராமாதாதா தாணீ வாமனா சீதரா!’ (மா. அ. 293)வரையுமாறு :நா ன ய ளா னா ரா ம தா னா விதா தா தா ணீ வா ம னா சீ த ராமா தூ ரு தா சீ னா போ மா ர மாபாடலின் நான்காமடி மேலை நடுவரிக்கண் நிகழுமாறு காண்க.