கூட சதுக்கம்

சித்திரகவி வகைகளுள் ஒன்று; பாட்டின் நாலாவது அடி எழுத்துக்கள்ஏனைய முதல் மூன்றடிக் கண்ணும். மறைந்து கிடக்குமாறு பாடுவது.எ-டு :‘புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக் கட்பிறைப் பற்கறுத்தபகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித்துர்க்கைபொற்புத்தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைப்பத் தித்திறத்தேதிகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே’இப்பாடற்கண், முதல் மூன்றடியுள் நான்காமடி மறைந் துள்ளது.கூடம் – மறைந்தது; சதுககம் – சதுர்த்தம் – நான்காவது.நெருப்பை ஒத்த கடிய சொற்களையும் படைக்கலன்கள் அணிந்த கைகளையும்வெகுட்சிப் பார்வையையும் பிறை போன்ற பற்களையும் உடைய பகைவரான அவுணர்கூட்டம் அழியக் கொன்றவளும், காஞ்சி மாநகரில் உள்ளவளும், அழகு தங்கியஇனிய யாழொலி போன்ற சொற்களையுடைய வளும், கிளி போன்றவளுமான கொற்றவையிடம்பக்தி செய்யும் திறத்தில் ஈடுபடாத மனத்தை நல்வழிப்படுத்தினால்,இருவினையும் நீங்குதற்குக் காரணமான ஞானத்தை அறிதல் ஆம் என்பதுஇப்பாடற் பொருள். (தண்டி. 98-2)