எழு – தன்வினை; எழூஉ – பிறவினை. கூட்டி எழூஉதலாவது சேர்த்து எழுப்புதல். இதனால் தன்வினையைப் பிறவினை யாக்குதற் பொருட்டாக அளபெடை பயன்படுத்தவாறு புலனாம். இது சொல்லிசை யளபெடையின்பாற்படும். (தொ. எ. 6 நச்.)