கூடல் என்றும், நான்மாடக் கூடல் என்றும், மதுரை என்றும் சங்க இலக்கியங்களில் கூறப்பெறும் ஊர்ப்பெயர்கள் ஒரே ஊரைக் குறிப்பனவேயாகும். அதாவது மதுரை என்ற ஊரையே குறிக்கும். ஆலவாய் என்பதும் அதன் பெயர், சங்க இலக்கியங்களில் கூடல் என்ற பெயரே பல இடங்களில் கரணப்படுகறது அடை மொழியுடன் நான்மஈடக்கூடல் எனவும் வழங்கப்படுகிறது. மதுரை என்ற பெயர் அருகியே இடம் பெறுகிறது. கூடி. இருத்தல் என்ற பொருளில் கூடல் எப் பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. சங்கப் புலவர்கள் கூடி இருந்து தமிழாய்ந்தமை நாம் அறிந்ததே. மாடங்களுடன் கூடியது என்ற பொருளில் நான்கு என்ற அடையுடன் நான்மாடக்கூடல் எனவும் பெயர் பெற்றது போலும். “நான்கு மாடங்கூடலின் நான் மாடக்கூடல் என்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கல், திருநடுவூர்” என்பர் நச்சினார்க்கினியர் (கலித்தொகை 92ஆம் பாடலின் உரை) இக்கருத்து சங்க கால அமைப்புக்கு ஏற்றதாய் இல்லை. அடுத்து மதுரை என்ற பெயர் இக்காலத்தில் வழக்கில் அதிகமாக இருந்தாலும், சங்க காலத்தில் அருகியே இருந்தமை தெளிவு. பேச்சு வழக்கில் இன்று காணும் மருதை என்ற பெயரே மதுரை என மருவி வழங்க இருக்க வேண்டும். அதாவது பண்டைக் காலத்தில் மரத்தால் ஊர்ப்பெயர்கள் அமையும் முறையையொட்டி மருத மரங்கள் நிறைந்த மருத நிலத்தின் அடிப்படையில் மருதை என்ற பெயா் தோன்றி, நாளடைவில் மதுரை என மாறி வழங்கியதாகக் கருதவேண்டும். அப்பண்டைய பெயரே இன்றும் பேச்சுவழக்கில் வழங்கிய வருவது கண் கூடு, சங்கு இலக்கியத்தில் யாண்டும் மருதை என்ற பெயர் இடம் பெறவே இல்லை. மருவி வழங்கிய மதுரை என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. காரணம் இலக்கியங்களில் புலவர்கள் பாட ஆரம்பிப்பதற்கு முன்னமே மருதை என்ற பெயர் மதுரை என மருவி வழங்க ஆரம்பித்து விட்டமையேயாம். வருணன் சினத்தால் பெய்த மழையை, விலக்க இறைவன். கட்டளையால் நான்கு மேகங்கள் மாடங்களாகக் கூடிநகரத்தைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்ற பெயர் பெற்றது என் பதோ, நகரின் அழகில் மகிழ்ந்த சிவன் மதுவைத் தெளித்தமையால் மதுரை எனப் பெயர் பெற்றது என்பதோ பொருத்தமாகத் தோன்றவில்லை. நகரின் அமைப்பைக் குறித்துக் காட்ட சிவபெருமான் அனுப்பிய ஆலகால நாகம் தன் தலையையும் வாலையும் கூட்டிப் காண்பித்தது அவ்வாறு வாலும் வாயும் கூடியதால் ஆலவாய் எனப் பெயர் பெற்றது என்பதும் கடம்ப மரங்கள் நிறைந்த கடம்பவனத்தில் ஒரு கடம்ப மரத்தின் கீழ் தேவேந்திரன் சிவலிங்கத்திற்குப் பூசை செய்ய, அதை அறிந்த பாண்டியன் அந்த வனத்தை நகராக்கினான். அதனால் தான் கடம்பவனம் என்ற ஒரு பெயர் மதுரைக்கு உண்டு என்பதும் புராணச் செய்தி. பாண்டியன் தொன்மையான தலைநகராய் அலைவாய்” என்ற பெயரை, அந்நகரின் அழிவுக்குப் பிறகு, சங்ககாலத் தம் தலைநகராய மதுரைக்கும் இட்டனன். அந்த அலைவாய் என்ற பெயரே ஆலவாய் என மாற்றம் பெற்று, அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டாக்கப்பட்டது என்ற கருத்தும் குறிப்பிடத் தக்கது. வையை ஆற்றை ஒட்டி மதுரைநகர் அமைந்திருந்தது. அதன் நீர்த் துறைகறைகளை ஒட்டிப் பூங்காக்கள் இருந்தன, இடையில் பெரும் பாணர் சேரி இருந்தது. அடுத்து அகழி, அகழியை அடுத்து கோட்டை அமைத்திருந்தன, கோயில் பழமையானது; வலிமை வாய்ந்தது, கோட்டையின் உள்ளே அகன்ற தெருக்களும், நடு நாயகமாய் அரண்மனையும் விளங்கின” இவை மதுரையைப் பற்றிப் பத்துப்பாட்டுத் தரும் செய்தி. இன்றைய மதுரைச் சங்க கால மதுரையல்ல. இன்றைய மதுரைக்குத் தெற்கில் சுமார் மூன்று மைல் ததெரலைவில் அவனியாபுரம் என்ற ஊர் உள்ளது. அங்குள்ள கோயிலில் சிவன் சொக்க நாதர். அம்மை மீனாட்டி, இன்றைய மதுரைக்குத் தெற்கில் சுமார் இரண்டு மைல் தொலைவில் ‘கோவலன் பொட்டல்’ என்று ஒருமேடு உள்ளது, கோவலன் கொல்லப்பட்ட இடம் அது தான் என்பது கர்ணபரம் பரைச் செய்தி, இந்த அவனியாபுரமும் கோவலன் பொட்டலும் இடையிலுள்ள நிலப்பகுதியுமே சங்ககாலக் கூடல் என்று கருதுகின்றனர். நாளடைவில் இன்றுள்ள மதுரை ஒரு புதிய நகரமாகத் தோன்றியது என்றும் எண்ணுகின்றனர்.
“திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து
மாடம் மலி மறுகற் கூடல் குடவயின்” (பத்துப், திருமுருகு 70 71.)
“மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாள் அங்காடி நனந்தலைக் கம்பலை” (௸, மதுரைக். 429. 430)
“நாம் வேண்ட நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தகோர்
தாம் வேண்டும் கூடல் தமிழ்” (௸. ௸. தனிப்பாடல் 1:3 4)
“வண்டு ஆர் கமழ் தாமம் அன்றே மலையாத
தண் தாரான் கூடல் தமிழ்”. (௸. ௸. தனிப்பாடல் 21 3 4)
“ஓம்பு அரண் கடந்த அடுபோர்ச் செழியன்
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின்
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே”. (நற். 39: 9 11)
“பெரற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை, வான் முகை
இரும் போது கமழும் கூந்தல்,
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோ மற்றே” (௸. 288 : 9 12)
“குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
மன்றல் கலந்த மணி மூரசின் ஆர்ப்பு எழ”. (பரி. 8: 29 30)
“ஏமூறு நாவாய் வரவு எதிர் கொள் வார் போல்,
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர் கொள் கூடல்”. (௸. 10:39 40)
“மதிமாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்
வதிமாலை, மாறும் தொழிலான்….. ” . (௸. 10:112 113)
“ஆடல் தலைத்தலை சிறப்ப. கூடல்
உரைதர வந்தன்று, வையைதீர்;…..” (௸. 12:30 31)
“பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்.றின் இடை”. (௸. 1722 23)
“கொய் உளை மான்தேர்க் கொடித் தேரான் கூடற்கும்
கைஊழ் தடுமாற்றம் நன்று”. (௸. 1745 46)
“புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்”” (௸. 19:8)
“குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு” (டை. 19:15)
“கோடு ஏறு எருத்தத்து இரும்புனலில் குறுகி,
மாட மறுகின் மருவி மருகுற,
கூடல் விழையும் தகைத்து தகைவையை,” (௸. 20:24 26)
“நெடு நீர் மலிபுனல், நீள் மாடக் கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது”” (௸. 20:106 107)
“நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ,
காமரு வையை கடுகின்றே கூடல்” (டை. திரட்டு, 2:3 4)
“பொற் றேரான் தானும், பொலம் புரிசைக் கூடலும்
மூற்றின்று வையைத்துறை” (௸.௸..2:26 27)
“பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன்கூடல்” (௸.௸ .2;46)
“வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்,
உரு கெழு கூடல்வ ரோடு,……” (௸. ௸. 2: 91 92)
“ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்
சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும்,
வாழ் வாரே வாழ்வார் எனப்படுவார்………”” (௸.௸ .12:1 3)
“ஆனாச் சர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை,
தேனார்க்கும் பொழுது, எனத் தெளிக்குநர் உளராயின்”* (கலித். 30:11 12)
“மீளி வேல் தாளையர் புகுதந்தார்
நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே” (௸. 31:24.25)
“பூந் தண் தார், புலர் சாந்தின், கென்னவன் உயர் கூடல்?” (ஷே. 574)
“கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவினகத்து”’ (௸.92:11 13)
“அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்?” (அகம். 9348 9)
“நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகன் கூடல்……”” (௸..149:13 14)
“வாடாப்பூவின் கொங்கர் ஒட்டி.
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
பொன் மலி நெடுநகர்க் கூடல்……” (௸..253:4 6)
“கடும்பகட்டுயானை நெடுந் தேர்ச் செழியன்,
மலைபுரை நெடுநகர்க் கூடல்……” (௸.296:11.12)
“பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங்கடி வியன் நகர்ச்சிலம்பும் கழியாள்” (௸. 315;7 8)
“எம்மனை வாராயாகி, முன் நாள்,
நும்மனைச் சேர்ந்த ஞான்றை, அம்மனைக்
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந்தேர்,
இழையணி யானைப் பழையன் மாறன்,
மாடமலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சர அய்,
கடும்பரிப் புரவியெொடு:களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
கோதைமார்பன் உவகையின் பெரிதே” (௸.346:16 25)
“வான் ஆர் எழிலி மழைவளம் நந்த,
தேன் ஆர் சமைய மலையின் இழிதந்து,
நான்மாடக்கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆடும் தீம்நீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ”’…… (பரி. திரட்டு111 5)
“உலகம் ஒருநிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான்வாட, வாடாத தன்மைத்தே தென்னவன்
நான் மாடக் கூடல் நகர்” (௸. ௸. 7:1 4)
“நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார்,
ஆனாவிருப்பெ௱டு அணி அயர்ப” (கலித் 9265 67)
“கண் ஆர் கண்ணி. கடுந்தேர்ச் செழியன்
தமிழ் நிலைபெற்ற. தாங்கு அருமரபின்
மதகிழ்நனை, மறுகின் மதுரையும் வறிதே” (பத்துப். சிறுபாண் 65 67)
“மைபகு பெருந்தோள் மழவர் ஓட்டி,
இடைப்புலத்து ஒழிந்த ஏந்து கோட்டுயானை,
பகைப்புலம் கவர்ந்த பாய்பரிப் புரவி,
வேல் கோல் ஆக, ஆள் செலநாறி,
காய்சின முன்பின் கடுங்கட் கூளியா்
ஊர் சுடு விளக்கின், தந்த ஆயமும்,
நாடுடை நல்எயில் அணங்குடைத் தோட்டி,
நாள்தொறும் விளங்கக் கை தொழூ௨ப் பழிச்சி
நாள் தரவந்த விழுக்கலம், அனைத்தும்,
கங்கை அம்பேர் யாறு கடற் படர்ந்தாங்கு
அளந்து கடை அறியா வளம்கெழு தாரமொரடு,..
பூத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை (௸. மதுரைக் 687 699)
சேகா! கதிர்விரி வைகலில், கை வாரூ௨க் கொண்ட
மதுரைப் பெருமுற்றம் போல, நின் மெய்க்கண் கு
திரையோ, வீறியது?’” (கலித் 96;65 67)