இன்றும் கூடலையாற்றூர் என்றே சுட்டப்படும் இவ்வூர் தன்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது மணி முத்தாறு நதியும், வெள்ளாறும் கூடுமிடத்தில் கோயில் உள்ளது. என்னும் எண்ணம் இப்பெயரின் காரணத்தையும் சுட்டி விடுகின்றது. ஆறுகள் கூடும் இடம் என்ற பொருள் கூட்லை யாற்றூருக்குப் பொருத்தமாக அமைகிறது.
தம்பிரான் அமர்ந்த தானம் பலபல சார்ந்து
கொம்பனார் ஆடல் நீடு கூடலையாற்றூர் சார (ஏயர் -100)
என சேக்கிழாரின் பெரியபுராணம் சுட்டும் இவ்வூர் சிவன் பற்றி சுந்தரர் பாடல்கள் அமைகின்றன. இவ்வூர் மிகவும் செழிப்பு கொண்டது என்பதனைச் சுந்தரர் பாடல்கள் தெரிவிக்கின்றன. (85)
கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூர் – 85-2
கொய்யணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூர் – 85-3
கொந்தணவும் பொழில் சூழ் கூடலையாற்றூர் – 85-4
கோதிய வண்டறையும் கூடலையாற்றூர்-85-5
கொத்தலரும் பொழில் சூழ் கூடலையாற்றூர் – 85-6
போன்ற சில இக்கருத்தின் விளக்கமாக அமைகின்றன.