ஊர் ஆடுதுறைப் பெருமாள் கோயில் எனச் சுட்டப்படும் தலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. திருமால் கோயில் உள்ள தேவர்கள் கூட்டமாகக் கூடி இத்தலத்து எம்பெருமானை வணங்கி வாழ்த்தியமையால் இத்திருத்தலம் கூடலூர் என்று திருநாமம் பெற்றதாகக் கூறுவோர் பெரியோர்.. திருமங்கை ஆழ்வார் பாடல்கள் இத்தலத்து இயற்கைச் செழிப்பைத் தரு கின் றன.
கள்ள நாரை வயலுள்,
கயல் மீன் காள்ளை கொள்ளும் கூடலூரே – நாலா -1360
வண்டலையுள் கெண்டை மிளிர
கொண்டல் அதிரும் கூடலூரே – – 136
எக்கலிடு நுண்மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே 1363
கூடலூர் என்ற பல பெயர்கள் அமையும் போது கூடும் தன்மை அமைவதைக் காண்கிறோம். ஆறுகள் கூடுமிடம் என்ற நிலையில் இப்பெயர் அமைந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் ஆடுதுறை என்ற இன்றைய பெயரினைக் காண எழுகின்ற ஒன்று.