கூடலூர்‌

ஆறுகள்‌ கூடும்‌ இடம்‌ கூடல்‌ எனப்பெயர்‌ பெற்று, அங்கே அமைந்த ஊரும்‌ கூடலூர்‌ எனப்பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. தென்‌ ஆர்க்காடு மாவட்டத்தில்‌ உள்ள கடலூர்‌ கெடில நதியும்‌, உப்பனாறும்‌ கூடும்‌ இடத்தில்‌ அமைந்துள்ளது. கடலூர்‌ என்றும்‌, இன்று வழங்கப்படுகிறது. இந்த களர்‌ கடல்‌ அருகே அமைந்துள்ள காரணத்தால்‌ கடலூர்‌ எனப்‌ பெயா்‌ பெற்றதாகக்‌ கூறப்படும் கருத்து அவ்வளவு ஏற்புடையதல்ல. கூடலில்‌ அமைந்த ஊர்‌ கூடலூர்‌ எனப்‌ பெயா்‌ பெற்று, அப்பெயரே கடலூர்‌ என மருவி வழக்கில்‌ வந்திருக்க வேண்டும்‌ எனக்‌ கூறுவதே பொருத்தமாகும்‌. கூடலூர்‌ என்ற பெயருடன்‌ மலை நாட்டில்‌ ஒரு கூடலூர்‌ இருந்ததாகத்‌ தெரிகிறது. இன்றைய ஊட்டி மலைத்‌ தொடரில்‌ மைசூர்‌ செல்லும்‌ வழியிலுள்ள கூடலூர்‌ இது போலும்‌. மதுரைக்‌ கூடலூர்‌ கிழார்‌ என்ற தொடர்‌ மதுரையை அடுத்து இருக்கும்‌ கூடலூரைக்‌ குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌. இன்‌றைய மதுரை மாவட்ட கம்பங்‌ கூடலூர்‌ போலும்‌, நற்றிணையில்‌ 200, 380 ஆய பாடல்களையும்‌, புற தானூற்றில்‌ 299 ஆம்‌ பாடலையும்‌ பாடிய கிழாரும்‌ கூடலூரைச்‌ சேர்ந்தவர்கள்‌. முதுமொழிக்‌ காஞ்சியை இயற்றியவரும்‌ ஜங்குறு நூறு தொகுத்தவருமான கிழார்‌ என்ற புலவர்‌ கூடலுரைச்‌ சேர்ந்தவரே.