குவலயானந்தம்

வடமொழியுள் ஓர் அணியிலக்கண நூல். பொருளணியை மாத்திரம்தேர்ந்துகொண்டு காளிதாசர் உவமையணிமுதல் ஏதுவணி ஈறாக நூறு அணிகள்விளங்க இலக்கண இலக்கியம் அமைந்த சுலோகங்களாகச் ‘சந்திராலோகம்’ எனவடமொழி அலங்கார நூல் ஒன்று யாத்தார். அந் நூலுக்கு 17ஆம்நூற்றாண்டினராகிய அப்பையதீக்ஷிதர் உரை வரைந்தும், அந்நூறுஅலங்காரங்கள் மேலும் இரஸவதலங் காரம் முதலாகஏகவாசகாநுப்பிரவேசஸங்கராலங்காரம் ஈறாக இருபது அலங்காரங்களைச்சேர்த்தும் ‘குவலயானந் தம்’ எனப் பெயரிய நூலாக முடித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் சமஸ்தானாதிபதிஜகத்வீர ராமகுமார எட்டப்ப மகாராஜா ஐயன் அவர்கள் தமது சமஸ்தான வடமொழிப்பண்டிதராம் சங்கரநாராயணசாஸ்திரிகளைக் கொண்டு குவலயானந் தத்தை 1889ஆம்ஆண்டு தெளிவுறத் தமிழில் மொழிபெயர்த் தார்; தமது சமஸ்தானத் தமிழ்வித்துவான் முகவூர் மீனாட்சி சுந்தர கவிராயர் அவர்களால் சுலோகங்களின்மொழி பெயர்ப்புக்களைச் செய்யுள்களாக அமைப்பித்தார். இவ்வா றாகத்தமிழில் குவலயானந்தம் என்னும் இவ்வணிநூல் கட்டளைக்கலித்துறைநூற்பாக்களொடு நூற்றிருபது அணிகளை விளக்குகிறது. அணிவகைகளுக்குஎடுத்துக்காட் டாக வெண்பா, விருத்தம் முதலாகப் பல யாப்பினவாகியசெய்யுள்கள் காணப்படுகின்றன.மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்டு, உறுப் பியல், அணியியல்சித்திரஇயல் என்ற மூன்று இயல்களை உடைத்தாய் முறையே 150, 120, 29சூத்திரங்களை உடைய குவலயானந்தம் என்ற நூலும் உள்ளது.