குளமுற்றம்‌

குளமுற்றம்‌ என்னும்‌ ஊர்‌ சேர நாட்டிலுள்ளது. (கலைக்‌ களஞ்சியம்‌ ) இந்த ஊரிலே துஞ்சிய சோழ மன்னன்‌ ஒருவன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவன்‌ எனப்‌ பெற்றான்‌. (புறம்‌ 69.) ஊரின்‌ வெளியிடம்‌ எனப்‌ பொருள்படும்‌ முற்றம்‌ என்ற. சொல்‌ அமைந்த ஊர்ப்பெயர்களில்‌ ஒன்று. இது குளம்‌ என்ற நீர்‌ நிலை காரணமாகக் குளமுற்றம்‌ எனப்பெயர்‌ பெற்றது போலும்‌,