நம்மாழ்வார் பாடல் வழித் தெரியவரும் வைணவத்தலம். இன்று பெருங்குளம் என்று அழைக்கப்படும் ஊர். மாடக்கொடி மதிள் தென் குளந்தை வண்குடபால் நின்ற மாயக்கூத்தன் என்பது நம்மாழ்வார் குறிப்பு (2868) குளத்தின் சிறப்பு காரணமாகப் பெற்ற பெயராக இருக்கலாம்.