குற்றெழுத் தளபெடை

குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்துக்களாய் நீண்டு மீண்டும் ஒலி மிக
அளபெடை எழுத்துப் பெறும் நிலை குற்றெழுத்தள பெடையாம்.
வரும் என்பது, ‘வரூஉம் இறுதி’ (தொ. சொ. 9) ‘யாதென வரூஉம்’ (சொ. 32)
என்றாற் போல, வரூஉம் எனக் குற்றெழுத் தளபெடை ஆயிற்று.
எ-டு : எ
ழு – ‘எ
ழூஉத் தாங்கிய கதவு’ (புறநா.
97)
கு
ழு – ‘கு
ழூஉக் களிற்றுக் குறும்பு’
(புறநா. 97)

ழு – ‘ப
ழூஉப்பல் அன்ன’ (குறுந்.
180)

ரு – ‘ப
ரூஉப்பிணிய தொடி’ (புறநா.
97)
இவ்வாறு குற்றெழுத்துள்ளவிடத்து அளபெடை வந்தது.
(தொ. எ. 261 நச். உரை)