குற்றெழுத்துக்கள் இடைநின்ற ஒற்றை மாத்திரை மிகுத்தல்

குற்றெழுத்துப் பலவாக வருதலான் தோன்றும் வண்ணம் குறுஞ்சீர்வண்ணம்.
அக்குற்றெழுத்துப் பயின்று வருதலான், இடைநின்ற ஒற்றின் ஒலி
மிகும்.
எ-டு : ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவல் புரவி’
(அகநா. 4)
என முன்னும் பின்னும் நின்ற குற்றெழுத்துக்களின் ஓசையான் ஙகர
ஒற்றொலி நீண்டவாறு. (குரங்ங்குளை) (தொ. எ. 50 நச். உரை)