தாது – ஏது – என்றல் தொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு – கொட்டு –
என்றல் தொடக்கத்துப் பொதுமொழிகளும், குன்றி யாது – நாடியாது –
எட்டியாண்டுளது – என்றல் தொடக்கத்துப் புணர்மொழிப் பொருள்
வேறுபாடுகளும் அறிதற்பொருட்டுக் குற்றுகரம் குற்றிகரங்களுக்கு மேல்
புள்ளி கொடுப்பாருமுளர். (நன். 97 மயிலை.)
ஆரியமொழிகளில் ஈற்றுக்குற்றுகரம் நிகழாது. எள் + து, கொள்+து – இவை
எட்டு கொட்டு என வந்த சொற்கள் ஏவல் வினையாதலின் ஆண்டுக் குற்றுகரம்
வாராது. எட்டு – கொட்டு – என்பன புணர்மொழியாகாது தனிச்சொல்லாய்
நின்றவழி வினைச்சொல்லாகாமல் பெயராயினவிடத்தே குற்றுகரமாம். குன்றி –
நாடி – எட்டி – என்பன நிலைமொழியாகாது, குன்று- நாடு – எட்டு என்பனவே
நிலைமொழியாய். வருமொழி முதற் கண் யகரம் வருதலின் ஈற்று உகரம் திரிந்த
இகரமே குற்றிய லிகரமாம்.