குற்றுகரஈற்றுத் தெரிநிலை வினைமுற்றின் பகுதிகள்

நட வா – முதலாக அஃகு ஈறாகக் கூறப்பட்ட இவ்விருபத்து மூன்றும்
உயிரும் ஒற்றும் குற்றுகரமும் ஆகிய ஈற்றவாகிப் படுத்தலோசையான்
அச்செய்கைமேல் பெயர்த்தன்மைப் பட்டு வினைமாத்திரையே உணர்த்தி நிற்பன.
(வினைப்பகுதி களாகிய முதனிலைத் தொழிற்பெயரின் இயல்புடைய இவற்றை
வடநூலார் ‘தாது’ என்ப). குற்றுகரத்தை வேறு பிரித்ததனால், போக்கு –
பாய்ச்சு – ஊட்டு – நடத்து – எழுப்பு – தீற்று – இத் தொடக்கத்து
வாய்பாட்டான் வருவனவும் கொள்க. (இ.வி. 43 உரை)