குற்றியலுகர முற்றியலுகரப் பொருள் வேறுபாடு

பெருக்கு, கட்டு முதலாயின பெயராகியவழிக் குற்றியலுகர ஈற்றுச்
சொற்களாம். அவை முன்னிலை ஏவலொருமை வினையாகியவழி முற்றியலுகர ஈற்றுச்
சொற்களாம். காது, கத்து, முருக்கு, தெருட்டு முதலாயினவும் அன்ன. (தொ.
எ. 68 நச். உரை)