குற்றியலுகர முற்றியலுகரப் புணர்ச்சி

குற்றியலுகரம் அரைமாத்திரை அளவிற்று; வரிவடிவில் புள்ளி பெறுவது.
எனவே ஈற்றுக் குற்றியலுகரம் மெய்யீறு போலப் புள்ளியீறாகும்.
புள்ளியீற்றின்மீது வருமொழிமுதலில் வரும் உயிரேறி முடியும். ஆகவே,
குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடம் கொடுப்பது. குற்றியலுகரம்
கெடாது; முற்றிய லுகரமாயின் உகரம் கெட நின்ற மெய்யின்மீது உயிரேறி
முடியும்.
“அறு என்ற முற்றுகரத்திற்கே ஈண்டு கேடு கூறினார்; என்னை?
குற்றுகரமாயின் ஏறிமுடிதலின்” (தொ. எ. 469.நச். உரை)
“அஃது + அன் + ஐ – ஆய்தம் கெடாமுன்பே அன்னின் அகரத்தைக்
குற்றுகரத்தின் மேல் ஏற்றுக; ஆய்தம் கெட்டால் அது முற்றுகரமாய்
முடிதலின்.” (422 நச். உரை)
இத்தொல்காப்பிய எழுத்ததிகார நச். உரைப்பகுதிகள் உளங்கொளத்
தக்கன.