குற்றியலுகர முறைப்பெயர்

நுந்தை என்ற முறைப்பெயரில் முதலெழுத்தாகிய நகரத்தை ஊர்ந்து
குற்றியலுகரம் வந்துள்ளது. இதனை இதழைச் சிறிது குவித்துக்
குற்றியலுகரமாக ஒலிப்பினும், மிகுதியும் குவித்து முற்றியலுகரமாக
ஒலிப்பினும் பொருள் வேறுபாடு இல்லை. (தொ. எ. 68 நச். உரை)