குற்றியலுகர எண்ணிக்கை

தனிநெடில் ஏழுடனே, ஆய்தம் ஒன்றும், மொழி இடையீறு களில் வரப்பெறாத
ஒளகாரம் ஒழித்து ஒழிந்த உயிர் பதினொன்றும், வல்லெழுத்து ஆறும்,
மெல்லெழுத்து ஆறும், வல்லெழுத்தொடு தொடராத வகரம் ஒழித்து ஒழிந்த
இடையெழுத்து ஐந்தும் ஆகிய முப்பத்தாறு எழுத்துக்களுள், யாதானும் ஒன்று
ஈற்றுக்கு அயலெழுத்தாகத் தொடரப்பட்டு, மொழியிறுதிக்கண்
வல்லெழுத்துக்களுள் யாதானும் ஒன்று பற்றுக்கோடாக அதனை ஊர்ந்து வரும்
உகரம் தன் அரை மாத்திரையின் குறுகும். (ஈற்றயல் எழுத்தாகிய இடவகை யான்
குற்றியலுகரம் 36 ஆயிற்று) (நன். 94 சிவஞா.)